ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா மீது ஜப்பான் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக உக்ரைனுக்கு டாங்கிகளை வழங்குவதாக ஜெர்மனியும் அமெரிக்காவும் முடிவு செய்ததை தொடர்ந்து ரஷ்யா, உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய பொருளாதாரத் தடைகளில், ரஷ்யாவின் இராணுவத் திறனை அதிகரிக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை அதன் 49 நிறுவனங்களுக்கு அனுப்புவதை பிப்ரவரி 3 முதல் தடை செய்வதாக ஜப்பான் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பட்டியலில் பீரங்கிகள், எக்ஸ்ரே ஆய்வு கருவிகள், எரிவாயு ஆய்வுக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள், வெடிபொருட்கள் மற்றும் ரோபோக்கள் ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கின்றன.