பிரித்தானியா நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு 8 இலட்சம் பவுண்ட்ஸ் அபராதம்.

பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை என்எச்எஸ்க்கு 8 இலட்சம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சாரா என்ற பெண்ஒருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரகால சிசேரியன் அறுவை சிகிச்சை முறை மேற்கொள்ள அவருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பிறந்து 23 நிமிடங்களிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

 இந்நிலையில், நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலையானது, பாதுகாப்பான பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்கிய தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த வைத்தியசாலையும் குற்றத்தை ஒப்புக்கொண்டது. இதனையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடைபெறமால் இருக்க வேண்டும் என்பதற்காக 8 இலட்சம் பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.