காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல்.

வன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்தக் காணிகளில் நீண்டகாலமாக வசிக்கும் அல்லது விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது.இருப்பினும் இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில் ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காடுகள் அதிகம் உள்ள மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் அமுலாவுள்ளது.வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மேற்படி வேலைத்திட்டத்திற்கு அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.