அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாத சம்பளம் இன்று வழங்கப்படும்.

189

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாத சம்பளம் இன்று (25) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும் நிறைவேற்று அதிகாரம் அற்ற அனைத்து ஊழியர்களுக்கும் இன்று சம்பளம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனவரி மாதம் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த 23 ஆம் திகதி வரை சம்பளம் வழங்குவதற்காக மாதாந்தம் செலவிடம் 93 பில்லியன் ரூபாவில் 87 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

இதுவரையில் சம்பளம் பெறாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.