ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை.

ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது நீதித்துறையை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக மேஜர் அஜித் பிரசன்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு 300,000 ரூபாய் அபராதமும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.