மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பஸ் சாரதியை தேடும் பொலிஸார்.

குருநாகல் வெலகெதர விளையாட்டரங்கிற்கு அருகில் தனியார் பேருந்தை நிறுத்திய பேருந்து சாரதி பேருந்துக்குள் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு நாளில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து 17 வயது மாணவியின் தாயாருக்குத் தெரியவர, அவர் போகமுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டை கவனித்த போகமுவ காவல்துறை அதிகாரிகள், இது குருநாகல் காவல்துறை பிரிவில் இடம்பெற்றுள்ளதால், மேலதிக விசாரணைகள் குருநாகல் தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான சாரதி, குருநாகல் கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து சாரதி ஆவார். சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.