சிறை செல்ல தயாராகும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை வழங்கவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில்,  நீதிமன்றத்தால் வழங்கப்படட தீர்ப்பின் பிரகாரம் 10  கோடி ரூபா செலுத்தும் அளவுக்கு தன்னிடம் இல்லை எனவும் சொத்தும் இல்லை என்றும்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்,

எனவே, மக்களிடமிருந்து அந்த பணத்தை திரட்டுவதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும், அந்த பணத்தொகை கிடைக்காவிட்டால் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.