நுவரெலியாவில் பெஜீரோ வாகனம் திருட்டு!

செ.திவாகரன் நானுஓயா நிருபர்

நுவரெலியாவில் பிரதான நகரில் ஹற்றன் நஷனல் வங்கி முன்பாக குயின் எலிசபெத் பிரதான வீதியில் நிறுத்திவைத்த பெஜீரோ வாகனம் இனந்தெரியாதவர்களினால் கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7:40 இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா-உடப்புசல்லாவ பிரதான வீதியில் பத்தீரன டயர் ஹவுஸ் கடையின் உரிமையாளர் தனது பெஜீரோவை நிறுத்திவிட்டு கடை ஒன்றுக்கு சென்று மீண்டும் வீட்டிற்குச் செல்வதற்காக தனது பெஜீரோ நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது குறித்த பெஜீரோ அங்கு காணவில்லை எனவும் தனது பெஜீரோ திறப்பு மாத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், வாகன காப்பறுதி , வாகன அனுமதிப்பத்திரம் என்பன வாகனத்தினுல் உள்ள நிலையில் தனது பெஜீரோ வாகன திருட்டுப்போயுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் சிசீரீவி காணொளி உதவியுடன் தீவிர விசாரகைளை முன்னெடுத்துள்ளனர்.