விஜயின் “தளபதி 67” படத்தில் நடிக்க இருக்கும் பிக் பாஸ் பிரபலம் ஜனனி?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த நடிகை ஜனனிக்கு பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வரும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு மிகப்பெரிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அது என்ன படம் என்றால், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் விஜயின் “தளபதி 67” படத்தில் தான். ஆம், இந்த படத்தில் தான் நடிகை பிக் பாஸ் பிரபலம் ஜனனி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிய வந்தவுடன் முதல் படமே மிகப்பெரிய படமான தளபதி 67 படத்தில் நடிக்க ஜனனிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவருடைய ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

மேலும் தளபதி 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.