மீண்டும் பிரதமர் வேட்பாளர் மோடி தான்.! பாஜக செயற்குழு கூட்டத்தில் முடிவு.!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும், பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவின் பதவிக்காலமானது, 20ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், 2024 ஜூன் மாதம் வரையில் அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என உள்த்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை பாஜக எதிர்கொண்டு பெரும்பாலான இடங்களை வெல்லும் எனவும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.