பாஜக இனி சமூக இயக்கமாக செயல்பட உள்ளது:பிரதமர் மோடி பேச்சு.!

பாஜக இனி வெறும் அரசியல் லட்சியாக அல்லாமல் சமூக பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒரு சமூக இயக்கமாக செயல்பட உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக முக்கிய தலைவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தலைவராக ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் பாஜக வேட்பாளராக பிரதமர் மோடி  இருப்பார் எனவும் அமித்ஷா தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில்,  ‘இந்தியாவின் சிறந்த சகாப்தம் வந்துகொண்டு இருக்கிறது. அதன் வளர்ச்சிக்காகஇ நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். பாஜக இனி வெறும் அரசியல் லட்சியாக அல்லாமல், சமூக பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒரு சமூக இயக்கமாக செயல்பட உள்ளது. எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.