தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவை களமிறக்கும் முயற்சியில் இங்கிலாந்தின் பிரபல தமிழ் வணிக நிறுவனம்.

இலங்கை தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையை மீட்டெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஒரு குழுவோடு அரசியலில் மீண்டும் இறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பின்னால் பல பிரமுகர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு வெளிநாட்டு தொழில்நிறுவனங்கள் இணைந்து நாட்டின் நன்மைக்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதற்கு உதவியாக உலகளாவிய ரீதியிலே பிரபல்யமாக இருக்கின்ற முன்னனி தமிழ்  நிறுவனம் சந்திரிக்காவிற்கு பின்னால் நின்று அவருடைய செலவுகளையும், பிரச்சாரங்களையும் அவருக்கான உதவிகளையும் செய்து  தேர்தலில் சந்திரிக்காவை போட்டியிட வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது .

கடந்த பல காலமாக இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த பொழுதும் அந்த நிறுவனத்தோடு நல்ல தொடர்பை பேணிவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு பெண்ணை இலங்கையின் தலைவராக நியமிப்பதன் ஊடாக உலகளாவிய ரீதியில் ஒரு அனுதாபத்தை பெறலாம் என்ற உள்நோக்கமும் இருக்கலாம் என்று கூறப்படும் அதேவேளை, இதற்கான பேச்சுவார்த்தைகள் பல புதிதிஜீவிகள்ஆன்மீகவாதிகளோடு பிரித்தானியாவிலும் இலங்கையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே  உலகளவில் பிரபல்யமான தமிழ் நிறுவனமும்  இலங்கையிலே பிரபல்யமான ஒரு அரசியல் குடும்பத்தை சார்ந்த சிங்கள அரசியல்வாதி பெண்ணும் இணைந்து இந்தத்தேர்தலை முன்னெடுக்கும் காரணத்தினால் நிச்சயமாக இது இனப்பிரச்சனைக்கு தீர்வாகவும் அமையும் என பலராலும் கூறப்படுகிறது. சந்திரிக்கா அந்த நிறுவனத்தினால் வறியவர்களுக்காக  இலங்கையில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.