கடவுளின் பெயரால் இந்த படுகொலையை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு.
உக்ரைன் மீது நடத்தப்படும் போர் கடவுளுக்கும் மனித குலத்துக்கும் எதிரான குற்றம் என பாப்பரசர் போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற வருடாந்திர உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பிப்ரவரி 2022 இல் ரஷ்ய உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து போப் பிரான்சிஸ் போரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.படையெடுப்புக்கு சில வாரங்களுக்குப் பிறகு, கடவுளின் பெயரால் இந்த படுகொலையை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.