தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஒதுங்கும் அதிகமான பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் அதிகமானவர்கள் இந்தத் தடவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.அவ்வாறு 20 வீதமான உறுப்பினர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் அதிருப்தி அடைந்தே அவர்கள் இவ்வாறு ஒதுங்குகின்றார்கள் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.