நானுஓயா டெஸ்போட் ஆலயத்தை உடைத்து திருட்டு.
நானுஓயா நிருபர் செ.திவாகரன்
நானுஓயா பொலிஸ் பிரிவில் உள்ள டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தை உடைத்து அம்மனின் தங்க நகைகள் ,உண்டிய பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
கடந்த செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் பின் நுளைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் இவ்வாலயத்தில் 30.000 ஆயிரம் பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியையும், ஆலய முன்றலில் வைக்கப்ட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னரும் கூட இவ் ஆலயத்தின் திருட்டு சம்பவம் இடம்பெற்று தங்க நகைகள், உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருட்டு போயிருந்தமை தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், இருப்பினும், அது தொடர்பில் பொலிஸார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.