போதைப்பொருள் வியாபாரம்- குழந்தை கடத்தல், கொழும்பில் பரபரப்பு.

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தையைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.