தமிழ்நாடு ‘தனி நாடு’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தகூடாது.! ஆளுனர் தமிழிசை கருத்து.!

சில அரசியல்வாதிகள் தமிழ்நாடு தனி நாடு என்று பேசி வருவதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வாறு பேசியுள்ளார்  என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார் .தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது கருத்தை கூறினார்.

இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்கள் எதிர்ப்பை கூறினார். இந்நிலையில் ஆளுநர் ரவி கூறிய கருத்து தெடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்  தமிழ்நாடு என்பதை தனி நாடு என்ற தோற்றத்தோடு ஏற்படுத்தி விடக்கூடாது. என குறிப்பிட்டார். மேலும்  சில அரசியல்வாதிகள் தமிழ்நாடு தனி நாடு என்று பேசி வருவதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வாறு பேசியுள்ளார்.’ என தமிழிசை சவுந்தராஜன் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.