இலங்கையில் இருந்து பிரான்சிற்கு கப்பலில் சென்ற இளைஞர்கள் சிலர் நாடுகடத்தப்படலாம்.

 

இலங்கையில் இருந்து பிரான்சிற்கு கப்பலில் சென்ற இளைஞர்கள் சிலர் நாடுகடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. கடந்த டிசம்பர் 23ஆம் திகதி  53 பேருடன்  கப்பல் ஒன்றில் சென்ற இளைஞர்கள் அனைவரும் பிரான்சில் ரிஜுனியன்  எனும் சிறிய தீவில் தங்க வைக்கபப்ட்டுள்ளனர்.அவர்களின் விசா நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படலாம் என அறியப்படுகின்றது.

இந்நிலையில்  அந்த இளைஞர்கள் மிகவும் விரக்தியில் இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்கள். 53 பேர் இங்கு வந்த நிலையில் அதில் மூன்று பேர் ஏற்றுக்கொள்ளப்பட்டு எஞ்சிய 49 பேர் நிராகரிக்கப்பட்டு  இருகிறார்கள். தங்கள் காணி,வீடு,வளவு என்பவற்றை விற்றுத்தான் இங்கு வந்திருக்கிறோம்  மீண்டும்  எங்களது நாட்டிற்குச் சென்றால் நிம்மதியாக வாழ முடியாது .தம்மை நாடு கடத்த கூடாது தடுக்குமாறு அனைவரையும் ஒத்துழைத்து செயல்படுமாறு அந்த இளைஞர்கள்  அனைத்து சமூக சேவை மனித உரிமை அமைப்புகள் இடம் அவர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.