ஆந்திராவில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு! எலான் மஸ்க் குக் பெசோஸ்க்கு அழைப்பு.!

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு எலான் மஸ்க், குக் பெசோஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் மார்ச் மாதம் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது.

இந்த மாநாட்டை முன்னிட்டு மிகப்பெரும் தொழில்நுட்பத் தலைவர்களான டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்க் ஆப்பிள் சிஇஓ டிம் குக் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டின் மூலம் மாநிலத்திற்கு பெரிய அளவிலான முதலீடுகளைப் பெறுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.