அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு
பாஜக கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில வளர்ச்சி தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் பாஜக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அண்ணாமலை அவரை ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்தார். இருப்பினும் காயத்ரி ரகுராம் கட்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில் காயத்ரி ரகுராம் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பாஜக கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மை தொண்டர்களுக்கு பாஜகவில் மதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கப்படுகிறது. அண்ணாமலை மலிவான பொய் பேசி அதர்மத்தின் பக்கம் நிற்கும் தலைவர்.
நான் பாஜகவில் இருந்து விலகுவதற்கு அவர்தான் காரணம். என்னால் அண்ணாமலையின் தலைமையின் கீழ் இருக்க முடியாது. பெண்களை உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மரியாதை இல்லாத இடத்தில் பெண்கள் தொடர்ந்து இருக்க கூடாது. என்னிடம் இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் வழங்கிய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புகார் கொடுக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அண்ணாமலையின் மீது போலீசில் புகார் கொடுப்பேன் என்று காயத்ரி ரகுராம் சொன்னது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது