முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து இலங்கை முழுவதும் அதிரடி நடவடிக்கை.

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து அதிரடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பில் ஒரு வலையமைப்பு இயங்குகிறது, அது மீன்பிடி படகுகளையும் உள்ளடக்கியது’ என்றும் அவர் குறிப்பிட்டார். கடற்படைத் தளபதியின் கூற்றுப்படி, போதைப்பொருள் ஏற்றுமதி பெரும்பாலும் இலங்கையின் கடல் எல்லையை அடைந்து பின்னர் இலங்கை படகில் இழுத்துச் செல்லப்படுகிறது.

இது பொலிஸார் மற்றும் கொள்ளையர்களின் விளையாட்டு போன்றது’ என கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். போதைப்பொருள் அச்சுறுத்தல் 100வீதம் ஒழிக்கப்படும் என கூற முடியாது என்றும், அதிகாரிகள் பார்ப்பது பனிப்பாறையின் நுனி மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.