முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகையின் இறுதி கிரியைகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகையின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 5ம் திகதி வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக வத்திகான் அறிவித்தது. முன்னாள் போப் பெனடிக்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் வத்திக்கானில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

சிலர் அவர் புனிதராக அறிவிக்கப்படுவார் என்று நம்புகிறார்கள். பாப்பரசர் பெனடிக்ட் சனிக்கிழமையன்று, 95 வயதில் காலமானார். மேலும் அவரது உடல் வத்திக்கான் மடாலயத்திலிருந்து திங்கள்கிழமை காலை 7 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு மாற்றப்பட்டது. அவரது உடல் இறுதிச் சடங்கிற்கு முன் மூன்று நாட்களுக்கு அஞ்சலிக்கா வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.