பாப்பரசரின் மறைவையொட்டி தேசியக் கொடியை நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி கோரிக்கை!

நாட்டின், அனைத்து அரச அலுவலக கட்டிடங்களிலும் தேசியக் கொடியை நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாப்பரசரின் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.