அரகலய போராட்டத்தின் பின்னணியில் சர்வதேசத்தின் சதி: எல்லே குணவன்ச தேரர் குற்றச்சாட்டு

அரகலய போராட்டத்தின் பின்னணியில் சர்வதேசத்தின் சதி இருப்பதாக தேசத்தை காக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,போராட்டத்தை முன்னின்று நடத்துவதில் போர்ன் எகெய்ன் என்ற குழு பிரதான பங்குதாரராக செயற்பட்டதாக கூறினார். இந்த குழு போராட்டத்தை முன்னெடுத்து சென்றதுடன், சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த சமயங்களில் ரோ மற்றும் சி.ஐ.ஏ புலனாய்வு சேவைகளும் பாரிய பங்களிப்பை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1980 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்து அமெரிக்க கிறிஸ்தவத்தை ஆதரிக்கும் குழுக்களில் ஒன்றே போர்ன் எகெய்ன் என்றும், அது நாட்டை சீர்குலைப்பதில் பெரும் பங்காகற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.