அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கான பகிரங்க அழைப்பு.

ஐக்கிய இலங்கைக்குள் வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத:த அரசியில் கட்சிகளையும் ஓராணில் திரளச் செய்ய கவனீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது. ஒன்றிணைவோம்- ஒருமித்த குரலில் உரக்கச் சொல்வோம் என்னும் தொனிப் பொருளில் எதிர்வரும் 5ம் திகதி முதல் 10ம் திகதிவரை வடகிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, யாழ்ப்பாணம் , மன்னார் , கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில்  முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த போராட்டத்தில், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள், கல்விமான்கள் ஊடகவியலாளர்கள்,மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் பங்ககொள்ளுமாறு  இலங்கை வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழ அழைப்பு விடுத்துள்ளது.