“முட்டை” இறக்குமதியால் முட்டை உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும்.

முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், முட்டை உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும் என அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதுள்ள முட்டை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.