மின்சார கட்டணத்தை உயர்த்தும் பிரேரணையை குப்பைத் தொட்டியில் வீசவும்-மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம்.

சட்டத்திற்கு முரணாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை உயர்த்தும் பிரேரணையை குப்பைத் தொட்டியில் வீசுமாறு மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு தற்போதுள்ள அமைச்சரை நீக்கிவிட்டு அனைவருக்கும் வேலை செய்யக்கூடிய மின்சாரத்துறை அமைச்சரை நியமிக்குமாறும் அச்சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு யோசனை, பலரது ஆட்சேபனை காரணமாக ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீண்டும் அமுல்படுத்த முயற்சி மேற்கொண்டால் போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.