தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரிக்க DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரி, நகம் உள்ளிட்ட உடற்பாகங்கள் மற்றும் சம்பவ இட சாட்சி தொடர்பான மரபணு பரிசோதனையினை(DNA) மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அனுமதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.