தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை; சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது! – ஓபிஎஸ்

சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்த செய்திகள் வெளியாகியிருந்தது.

இதற்கு அரசியல் கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீரழித்த திமுக, தற்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாய் விளங்கும் காவல் துறையினருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சென்றிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை; சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது!’ என தெரிவித்துள்ளார்.