மக்கள் 999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டாம் : கொவிட் காலத்தை விட அதிக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பிரித்தானிய மருத்துவமனைகள்
பிரித்தானியா முழுவதும் மருத்துவமனைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதால், மக்கள் 999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்இ சில நோயாளிகள் படுக்கை வசதிக்காக 40 மணி நேரம் வரையில் காத்திருக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைகளுக்கு வெளியே காத்துக்கிடப்பதாகவும், படுக்கைகளை காலி செய்து நெருக்கடியை சமாளிக்கமருத்துவமனை நிர்வாகம் கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்துவரும் முதல் நாள் கண்டிப்பாக என் எச்எஸ்சேவையை நாடுவோரின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருக்கும் எனவும், தற்போதும் அதே நிலை என கிரேட்டர் மான்செஸ்டர் சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
மேலும் உயிருக்கு ஆபத்தான சூழல் இல்லாதவரையில் பொதுமக்கள் கண்டிப்பாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், அவசர சிகிச்சை பிரிவை நாட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்துள்ளனர். என்எச்எஸ் சேவையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றிவரும் மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், இது ஒரு தேசிய அவசர நிலை, கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தை விடவும் மிகவும் மோசமான சூழலை எதிர்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.