யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதல்:
யாழ்ப்பாணத்தில் மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார்.யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.
காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு 7.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத மர்மக் கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
காயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்