தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு.

141

தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ராகவன் என்பவர் தொடர்ந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.