சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பேண வழி.

மனித உடலின் இயங்கு நிலையில் சிறுநீரகங்கள் முக்கியமான உறுப்புக்கள். அவை வடிகட்டிகள் போன்று, இரத்தத்தை வடித்துச்சுத்தம் செய்து கழிவுப் பொருட்களையும் மேலதிகதிரவத்தையும் சிறுநீராக மாற்றி  வெளியேற்றி விடுகின்றன. அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி,உடம்பிலுள்ள திரவத்தினதும் பல்வேறு உப்புக்களினதும் அளவைச் சரிசெய்கின்றன. அத்துடன், எலும்புகளில் கல்சியம் எடுத்துக்கொள்ளப்படுவதைக் கட்டுப்படுத்தும் பல வளர் ஊக்கிகளையும் (ஹோர்மோன்ஸ்) விட்டமின் D யையும் விடுவிக்கின்றன.

சிறுநீரக நோய் முதலில் ஆரம்பிக்கும்போது எந்த நோய்க் குறிகளும் தென்படாது. அதனாற்தான்,  வருடாந்த மருத்துவ சோதனையைச் செய்துகொள்ளுதல் முக்கியமானது. தெரியக்கூடிய அல்லது  அனுபவிக்கக்கூடிய முதலாவது குறிகாட்டி வீக்கமாகும். இரத்த அழுத்தத்திலும் உடம்பின் திரவ சம நிலையிலும் சிறுநீரகநோய் மாற்றங்களை ஏற்படுத்துவதால், சிறப்பாகப்பாதங்களிலும் கணுக்கால்களிலும் வீக்கம் இருக்கும்.சிறுநீரக நோய் இப்படிப்பட்ட ஆரம்ப கட்டத்தில் கண்டுகொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் பெரும்பாலான நோய்க்குறிகள் ஏற்படமாட்டா. சிறுநீரகம் தொழிற்படுவதில் ஏற்படும் சீர்குலைவு கண்டுகொள்ளப்படாவிட்டால்,  பெரிதும்  கூடுதலான அல்லது குறைவான சிறுநீர் போதல், களைப்பு, அரிப்புள்ள தோல், குமட்டல், மற்றும் வாந்தி எடுத்தல என்பன தென்படும்.
ஆகவே மிக முக்கியமாக சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை எப்படி பேணலாம்?
ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள்.அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள்.(அடக்கிவைக்கக்கூடாது.சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்ததும் கழித்துவிட்டு வேண்டும் ) உடனே மறுபடியும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள் .மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழித்துவிடுங்கள் இப்படியே உங்கள் வேலை கெடாமல் இதனை 3 நாள்கள் தொடர்ந்து செய்யுங்கள் முதல் முறை நீர் அருந்தி நீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி இரண்டாம் முறை > ஆன நேரத்தில் பாதி மூன்றாம் முறை என இருந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமானது.
உதாரணமாக 1 time 60 மினிட்ஸ் 2 time 30 மினிட்ஸ் 3 தடவை 15 minutes என நீர் வெளியேற வேண்டும். இதில் தவறு இருந்தால் இயற்கையாகவே சரி செய்யலாம் . ஆனால் ஒன்று ஒரு சிறுநீரகம் மெல்ல மெல்ல கெட்டுப்போக எத்தனை காலம் அகின்றதோ அதே காலம் அது இயற்கையாகவே சரி செய்ய எடுத்துக்கொள்ளும். உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்பட தொடங்கிவிடும்.
உங்களது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய அதிக கவனம் தேவைப்படுகிறது என்றால்> நீங்கள் புரோட்டின் குறைவான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன்> மீன் போன்றவற்றை உண்ணாமல் இருக்க வேண்டும். அதோடு> காபி> சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது அவசியம்.குதிரைவாலியை நாம் நமது அன்றாட உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்வதில்லை. இது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.வாழைப்பழம்> செர்ரி> வெள்ளரிக்காய்> நட்ஸ்> பப்பாளிஇ உருளைக்கிழங்கு> பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உகந்த பழங்களாகும்.மெக்னீசியம் சிறுநீரக கற்களை வளரவிடாமல் தடுக்கிறது. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
நலமே வாழ ஆரோக்கியம் பேணுவோம்.