எழிலன் விவகாரம்- தமக்கு எதுவும் தெரியாது கோட்டா,சரத் பொன்சேகா தெரியாது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனை முற்படுத்தவேண்டும் அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு தொடர்பில் தாங்கள் எதையும் அறியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெரிவித்துள்ளனர்.

“நான் தற்போது முன்னாள் ஜனாதிபதி. அதேவேளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர். தங்கள் கேள்விக்கு (எழிலன் தொடர்பான நீதிமன்ற உத்தரவு) பதிலளிக்கக்கூடிய நிலைமையில் நான் தற்போது இல்லை.

எனினும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பில் நான் இன்னமும் அறியவில்லை. எனவே, அறியாத விடயத்துக்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை” என்று கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அதேபோன்று இந்த உத்தரவு தொடர்பில் இன்னமும் அறியவில்லை என்று சரத் பொன்சேகா கூறினார்.