சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக மாறியுள்ள இலங்கை!
சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஐஸ் என்ற போதைப்பொருள் போக்குவரத்து செய்யும் பிரதான கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்டர்போலினால் மேற்கொள்ளப்பட்ட லயன்ஷிப் எனப்படும் நடவடிக்கையின் போது இந்த தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக தெரியவருகிறது.
ஆசிய பிராந்திய வலய நாடுகளில் அதிகளவு ஐஸ் போதைப்பொருள் போக்குவரத்து செய்வதாகவும், இதனால் பல்வேறு புதிய வழிகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயன கலவைகள் மிகவும் ஆபத்தானவை என தெரிவிக்கப்படுகின்றது.
ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய 24 இலங்கையர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.