நானுஓயா மாஹாஎலிய ஆற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

செ.திவாகரன்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா மாஹாஎலிய காட்டுப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்களால் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த காட்டுப் பகுதிக்குச்சென்ற நானுஓயா பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்

குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சுமார் 51 வயதுமதிக்கத்தக்க ஓர் ஆண் எனவும் குறித்த சடலம்உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.