பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

பிரான்ஸ் நாட்டின் ரோன் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 14 பேரை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு  அனுப்பி வைத்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.