பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இன்று களுத்துறை பாடசாலைகளில் மோப்ப நாய்களுடன் பொலிஸார் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த செயற்பாட்டிற்கு பெற்றோர் பூரண ஆதரவை வழங்குவதாக கல்வி  அமைச்சு தெரிவித்துள்ளது.