வங்க கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
இன்று வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் அறிவிப்பு.
இன்று வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் எனவும் தகவல் கூறியுள்ளது.
இதனிடையே, கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.