அமைச்சர்களுக்கு மின் கட்டண நிலுவையை செலுத்த 2 வார கால அவகாசம்.

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் மாத்திரமே வழங்கப்படும் என அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்  இந்திக்க அனுருத்த, பல அரசாங்கங்களின் அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் செலுத்தப்படாமல் இருப்பது பாரிய பிரச்சினையாக உருவடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், அவர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகின்ற போதிலும்இ அவர்கள் ஆறு மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை குறித்த வீடுகளிலேயே தங்கியிருப்பதோடு மின் கட்டணத்தையும் வெலுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்