தமிழ் தகவல் நடுவகத்தின் மனித உரிமைகள் தினவிழா.

456


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவகத்தின்(TIC) உலக மனித உரிமைகள் தினம் 2021 நிகழ்வு சனிக்கிழமை டிசம்பர் ஆம் 10 திகதி இலண்டனில் நடைபெற்றது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய ஆண்டு நிறைவையிட்டு மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகமெங்கிலும் உள்ள அனைத்து இனத்தினவருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமைகள் மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தவும் TICயினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

                                        

அதன்படி TIC யின் இவண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு இலண்டனில் சட்டன் (Sutton) பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.இந்த வருட நிகழ்வுகள் `”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டொருக்கான நீதி தேடல்”(Justice For Enfored Disappearance in Sri Lanka) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஐ. நா நிபுணரும் , பேராசிரியரும் அமெரிக்கா சட்ட வல்லுனருமான அல்பிரட் மொறைஸ் டீ சயாஸ்(Prof Alfred- Maurice de Zayas) கலந்து சிறப்பித்தார்.