உக்ரைனுக்காக பிரார்த்தனை செய்த போப் பிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுத்தார்.
மத்திய ரோமில் நடந்த பாரம்பரிய விழாவில் உக்ரைனுக்காக பிரார்த்தனை செய்த போப் பிரான்சிஸால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இத்தாலியில் பொது விடுமுறை நாளான இம்மாகுலேட் கான்செப்ஷனைக் குறிக்கும் வகையில், நகரின் பியாஸ்ஸா டி ஸ்பாக்னாவில் நடந்த விழாவில் சதுக்கத்தில் ஒரு நெடுவரிசையில் நிற்கும் கன்னி மேரியின் சிலைக்கு முன்உரையாற்றிய அவர், உக்ரேனிய மக்களின் நன்றியுணர்வை இன்று உங்களிடம் கொண்டு வர விரும்புகிறேன் என தெரிவித்தபோது அவர் ஒரு கணம் இடைநிறுத்தப்பட்டார்.
அவரது உடல் உணர்ச்சியால் நடுங்கியது. அந்த நேரத்தில் பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர்.அவர் தொடர்ந்துஇ ‘உக்ரேனிய மக்களிடம் அமைதிக்காக நாங்கள் நீண்ட காலமாக இறைவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறியபோது அவரது குரல் இன்னும் உணர்ச்சியால் நடுங்குகியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது