சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.