12 புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக மொட்டு கட்சியில் இருந்து ரணிலுக்குப் மீண்டும் அழுத்தம்.
மொட்டு’க் கட்சியிலிருந்து 12 பேரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்ககெடுப்பு நாளை மாலை இடம்பெற்ற பின அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பஸில் தரப்புக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும், ஆனால், அது தொடர்பான ரணிலின் செயற்பாடு அவ்வளவு வேகமாக இல்லை என்று பஸில் தரப்பு குற்றம் சுமத்துகின்றது.
இந்த நியமனத்தை விரைவுபடுத்தக் கோரி ரணிலுக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் ஆளுநர்கள் – அமைச்சர்கள் நியமனத்தை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.புதிய ஆளுநர்கள் நியமனமும் அமைச்சர்கள் நியமனம் போல் இழுபறியிலேயே உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு காரணமாகவே ஆளுநர்களின் நியமனமும் இழுபறியில் உள்ளது என்று அறியமுடிகின்றது.இருப்பினும், இந்த இரண்டு விவகாரம் தொடர்பிலும் வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு முடிந்ததும் ஜனாதிபதி ரணில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று ஜனாதிபதி வட்டாரம் தெரிவிக்கின்றது