ஸ்பெய்னை பெனல்டி முறையில் 3:0 கோல்களால் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது மொரோக்கோ.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு மொரோக்கோ  அணி தகுதிபெற்றுள்ளது.நேற்று நடைபெற்ற 16 அணிகள் சுற்றுப் போட்டியொன்றில் முன்னாள் சம்பியன் ஸ்பெய்னை பெனல்டி முறையில் 3:0 கோல்களால் மொரோக்கோ வென்றது.

இப்போட்டியின் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. இதனால் மேலதிக 30 நிமிட ஆட்டம் நேரம் வழங்கப்பட்டது.அதிலும் கோல் எதுவும் புகுத்தப்படவில்லை.

அதன்பின் தலா 5 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் 3:0 கோல்கள் விகிதத்தில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது.மொரோக்கோ வீரர்களான அப்தெல்ஹமீத் சபிரி, ஹக்கீம் ஸியேச், அச்ரப் ஹக்கிமி ஆகியோர் பெனால்டி முறையில் கோல்களைப் புகுத்தினர்.

மொரோக்கோ கோல் காப்பாளர் யாசின் பவ்னோ சிறப்பாக செயற்பட்டு,, ஸ்பானிய வீரரகள் உதைத்த பந்தகளைத் தடுத்தார்.உலகக்கிண்ண  கால்பந்தாட்ட வரலாற்றில் முதன்முறையாக மொரோக்கோ கால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.