பிரித்தானியாவில் அச்சுறுத்தும் ஸ்ட்ரெப் ஏ நோய் பரவல்: பாடசாலை மாணவர்கள் உயிப்பு வீதம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ நோய் பரவல் தீவிரமமைடந்துள்ள நிலையில், இந்த வாரம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாடசாலைக்கு வராமல் இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்ட்ரெப் ஏ நோயால் மாணவர்கள் உயிரிழந்த பாடசாலைகளில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருப்பதாக முடிவெடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களில், தொண்டை புண் போன்ற லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்தும் ஒப்பீட்டளவில் பொதுவான பாக்டீரியாவான ஸ்ட்ரெப் ஏ நோயால் பாதிக்கப்பட்ட ஏழு பாடசாலை வயது குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 12 வயது சிறுவன் உயிரிழந்த முதல் மேல்நிலைப் பாடசாலை மணவர் ஆவார். அவர் தென்கிழக்கு லண்டனில் உள்ள லூயிஷாமில் உள்ள கோல்ஃப் பாடசாலையில் 8ம் ஆண்டு மாணவராக இருந்ததாக கூறப்படுகிறது.
ஹை வைகோம்பைச் சேர்ந்த நான்கு வயது முஹம்மது இப்ராஹிம் அலி, ஸ்ட்ரெப் ஏ நோயால் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.லங்காஷயரின் போல்டனைச் சேர்ந்த நான்கு வயது கமிலா ரோஸ் பர்ன்ஸ், லிவர்பூலில் உள்ள ஆல்டர் ஹே குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
கடந்த வாரம் ஆஷ்போர்டில் உள்ள அருகிலுள்ள எச்செல்ஃபோர்ட் ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியர்கள்இ இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.பிரித்தானிய சுகாதார சேவை முகவரம் மூலம் குழந்தைகள் தொடர்ந்து பாடசாலைக்குச் செல்ல வேண்டும். பெற்றோர்கள்ஃபராமரிப்பாளர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.