சட்டவிரோத போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொலிசாருக்கு அதிகாரங்களை அளித்துள்ளது பிரித்தானிய அரசு.
சட்டவிரோத போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு பொலிசாருக்கு புதிய அதிகாரங்களை பிரித்தானிய அரசாங்கம் வழங்கி வருவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பொலிஸ் மா அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சட்டவிரோதப் போராட்டங்களைத் தீர்க்கமாக முறியடிப்பதில் தமது முழு ஆதரவையும் வழங்குவேன் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காக அனைத்து பொலிஸ் உயரதிகாரிகளுடனும் தாம் அமர்ந்திருப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
ஒரு சுயநல சிறுபான்மையினர் சாதாரண மக்களின் வாழ்க்கையை சீர்குலைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டத்தை மீறுபவர்கள் அதன் முழு அதிகாரங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து. அந்த அதிகாரங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளோம். அதன்படி, சட்டவிரோத போராட்டங்களை ஒடுக்குவதற்கு பிரித்தானிய அரசாங்கம் ஏற்கனவே பொலிஸாருக்கு சில அதிகாரங்களை வழங்கியுள்ளது.
அவர்களுக்கு எனது முழு ஆதரவும் அளிக்கப்படுகிறது. அதேபோன்று பொலிசாருக்கு அரசிடம் இருந்து எந்த உதவி வேண்டுமானாலும் செய்து தருவதாக கூறியுள்ளேன். புதிய அதிகாரங்களின்படி, அவர்கள் அதைப் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த முடிவு குறித்து டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர், ‘இவைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.