மர்மமான முறையில் பெண் மருத்துவர் மரணம் .

பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவரின் உடல் அவர் வசித்து வந்த வீட்டில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கடுன்னனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சேவையாற்றி வந்த 54 வயதான பெண் மருத்துவரின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடுன்னனாவை பிரதேசத்தில் வசித்து வந்த இந்த மருத்துவரின் மர்ம மரணத்திற்கு காரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பாக கடுகன்னனாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர் வசித்து வந்த வீட்டில் அவரது தாய், கணவர் மற்றும் உறவினரான பெண்ணொருவர் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணத்திற்கு பின்னரான பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.