போதைப்பொருளுக்கு அடிமையான கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான யாழ் மாணவன்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிப்படுள்ளார்

இந்தச்  சம்பவம் கொழும்பு வெள்ளவத்தைப்  பகுதியில் இடம்பெற்றது.

தனது நண்பருடன் குறித்த மாணவன் வீடொன்றில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இரு மாதங்களாக மாணவன், தனது பெற்றோர் மற்றும் உறவுகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்த்துள்ளார்.

தொலைபேசி ஊடாக தொடர்பு எடுத்த போதும் மாணவனின் நண்பன் பதிலளித்துள்ளார்.அத்துடன்   குறித்த மாணவன் பல்கலைக்கழகம் செல்லவில்லை என நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த நிலையில் தாயார் கடந்த வாரம் கொழும்பு சென்றுள்ளார்.

அங்கு மகன்  போதைப்பொருளுக்கு அடிமையான விடயம் தெரியவந்துள்ளது .தாய் வந்தது கூட மாணவன்  அறியாத நிலையில் அறையின் மூலையில்  இருந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது மாணவன் போதைப்பொருளுக்கு அடிமையான விடயம் தெரியவந்துள்ளது.

மாணவனுடன் இருந்த நண்பனிடம் இது பற்றி  பெற்றோர் வினவியபோது, தன்னை காதலி  ஏமாற்றி விட்டதாகவும் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறி இருப்பதால் அவரை தொந்தரவு செய்யவில்லை என   நண்பன் பதிலளித்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த மாணவனை போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் சேர்க்குமாறு தெரிவித்து,வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இதனை அடுத்து,மகனின் நிலையை தாங்கிக் கொள்ள முடியாத தாயார் தற்கொலை செய்ய முயசித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.