மாவீரர் நாள் 2022 – Oxford பிரித்தானியா.
தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட சக்கரத்தை இயக்கும் உந்துசக்தியாக, தாய்நாட்டின் விடுதலைக்கு தம்முயிர் தந்த மாவீரச்செல்வங்களை நினைவுகொள்ளும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உலகத்தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது.
வழமைபோல் தமிழ்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இவ்வருடமும் சிறப்பாகவும் உணர்வெழிச்சியுடனும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலையெனத்திரண்டு தாய்மண்ணின் விடிவிற்க்காக வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு சுடறேற்றி மலர்ணக்கம் செலுத்தினர்.
வழமையை விட சிறப்பாக எழுச்சியூட்டப்பட்ட மாவீரர் நினைவு இல்லத்தில் முதலில் பொதுச்சுடர்களை வரலாற்றுமைய அறங்காவலர் சபைத்தலைவர் திரு. சுகந்தகுமார் அவர்களும் மகளீர் சார்பாக முன்னை நாள் போராளி திருமதி. தருமன் சர்வா அவர்ளும் இளையோர்சார்பாக செல்வி. மேரிமடோனா அன்ரனி அவர்களும் செல்வன். பாஸ்கரன் லஷ்மன் அவர்களும் வரலாற்று மைய தோற்றுவிப்பாளர் அவையை சேர்ந்த திரு.பவா அவர்களும் நாடுகடந்த அரசின் அரசியல் விவகாரபிரதி அமைச்சர் திரு. பார்த்தீபன் அவர்களும்ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து நாம் வாழும் நாட்டின் இறையண்மையை மதித்து பிரித்தாணியாவின் தேசியக்கொடிநாடுகடந்த அரசின் பாரளுமன்ற உறுப்பினர் திரு. நீதிராஜ் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது. தொடரந்து தமிழீழத்தேசியக்கொடி நாளில் லண்டன் மாநகரில் ஏற்றிவைக்கப்பட்ட தமிழீழத்தேசியக்கொடி உலகத்தமிழர் வரலாற்றுமைய இளையோர் அணியின் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்து வரப்பட்ட தமிழீழத்தேசியக்கொடியினை 2022ம் ஆண்டுக்கான மாவீரர் நாள் பிரதான இணைப்பாளர் திரு. சந்திர மோகன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது, தொடர்ந்து தலைமைச் செயலகத்தால் வெளியிடப்படும் மாவீரர் அறிக்கையும், இறுதியாக 2008ம் ஆண்டின் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் உரையின் முக்கிய பகுதியும் ஒலிபரப்பப்பட்டது.
(சரியாக தாயக நேரம் 6.05 ) பிரித்தானியா நேரம் 12.35க்கு துயிலும் இல்ல மணியோசை ஒலிக்க பிரதான சுடர் ஆனந்தபுர வரலாற்று சமரில் வீரகாவியமான பிரிகேடியர் ஆதவன்(கடாபி) அவர்களின் பிள்ளைகளால் ஏற்றி வைக்கப்பட்து. சமநேரத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கல்லறைகளில் நிலைப் படுத்தப்பட்ட திருவுருபப் படங்களுக்கு கண்ணீர் மல்க சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் திருவுருவம் படங்களுக்கு வணக்கம் செலுத்தியவாறு, அரங்க நிகழ்வுகளுக்கா அமைக்கப்பட்டிருந்த பெருமண்டபத்ததில் மாவீரர் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. நிகழ்ச்சிகளை திரு.புரட்சி அவர்களும் செல்வி. கிசானி விக்னேஸ்வரராஜா தொகுத்து வழங்கினார்கள்.
வரவேற்பு நடனத்தினை திருமதி சுஜத்தா அவர்களின் மாணவிகள் வழங்கினர்.
“வீரத்தினை உதிக்கும் மரணம்” எனும் பாடலுக்கு மாவீரர்களின் பிள்ளைகள் நடனத்தினை வழங்கினர். “கல்லறைகள் விழித்திருக்கும் கார்த்திகை” எனும் பாடலுக்கான நடனத்தினை நேர்த்தம்டன் மாணவிகளும், “சென்று வாருங்கள் என்று சொல்வீர் எனும் பாடலுக்கு சிறி கிருஷ்ணா கலாமன்ற மாணவிகளும் தாய் மண்ணை முத்தமிட வேண்டும் எனும் பாடலுக்கு திருமதி குணசிறி ராஜாராம் அவர்களது மாணவிகளும் நடனத்தை வழங்கியிருந்தனர். மாவீரர்களை நினைவு கொள்ளும் பாடல்கள் கவிதைகள் என்பனவும் இடம்பெற்றது.
மேலும் உலகத் தமிழர் வரலாற்று மையம் சார்பாக அதன் செயற்பாடுகளை விளக்கும் வகையில் திரு அகிலவாணர் அவர்களினால் உரை வழங்கப்பட்டது
தொடரந்து மாவீரர் நாளையொட்டி நாடுகடந்த அரசின் பிரதமர் அவர்களால் வெளியிடப்படும் அறிக்கையினை வரலாற்று மையத்தின் ஆலோசகர் திரு.பாலா மாஸ்ரர் அவர்களால் வாசிக்கப்பட்டது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக Honourable Gareth Thomas Labour MP for Harrow West Shadow Minister for Trade Policy.Hon. Paul Scully MP, Minister for London and Minister for Technology and Digital Economy. ஆகியோரின் உரைகள் காணொளி வடிவத்தில் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்வின் முடிவில் உணர்வுபூர்வமாக உறுதி ஏற்புடன் மற்றும் தேசியக்கொடிகளின் கையேற்புடன் 2022 ஆண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.